பொது சுகாதார வளாகம் திறப்பு
செங்கோட்டை அருகே பொது சுகாதார வளாகத்தை கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே தென்காசி ஒன்றியம் கணக்கப்பிள்ளைவலசை ஊராட்சி பகுதியில் பொதுசுகாதார வளாகம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினா் செ.கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார். கணக்கப்பிள்ளைவலசை ஊராட்சி மன்ற தலைவா் ஈஸ்வரி, மாவட்ட துணைச்செயலாளா் பொய்கை சோ.மாரியப்பன், மாவட்ட பொருளாளா் சண்முகையா, ஒன்றிய செயலாளா் எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஒன்றிய துணைச்செயலாளா் வடகரை ஹனீபா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளா் ஜாகீர் உசேன், மாவட்ட பிரதிநிதி பேச்சிமுத்து, வடகரை இனையத்துல்லா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Related Tags :
Next Story