ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடம் திறப்பு


ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடம் திறப்பு
x

தாணிக்கோட்டகத்தில் ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் தெற்கு பகுதியில் ரூ.14 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் முருகானந்தம் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் தட்சிணாமூர்த்தி, பணியாளர் வெங்கடேஷ் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story