வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு திறப்பு விழா


வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு திறப்பு விழா
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு திறப்பு விழா நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக குடியிருப்பு திறப்பு விழா நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். கீழப்பாவூர் யூனியன் தலைவி காவேரி, மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்விபோஸ், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.

அலுவலக கட்டிடத்தை தனுஷ்குமார் எம்.பி.யும், கல்வெட்டை பழனி நாடார் எம்.எல்.ஏ.வும் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, அழகுசுந்தரம், பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story