உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்
தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்
இந்திய அஞ்சல்துறை சார்பில், தபால்தலை சேகரிப்பை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். பள்ளி இறுதித்தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். philately school club-ல் உறுப்பினராக அல்லது philately account வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும். புதிதாக philately account பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் ரூ.200 செலுத்தி தொடங்கலாம். இதில் உறுப்பினராக இருக்கும் மாணவர்களும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு எழுத்து, வினாடி- வினா போட்டி வருகிற 1.9.2022 அன்று நடத்தப்படும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் www.tamilnadupost.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து The postmaster General, southern Region, madurai 625002 என்ற முகவரிக்கு வருகிற 29-ந் தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் "தபால்தலை சேகரிப்பு" என்ற தலைப்பில் செயல்திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.500 வீதம் ஒரு ஆண்டுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த தகவலை நெல்லை கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.