புனித சவேரியார் பேராலய திறப்பு விழா
பாளையங்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட புனித சவேரியார் பேராலய திறப்பு விழா நடந்தது.
பாளையங்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட புனித சவேரியார் பேராலய திறப்பு விழா நடந்தது.
பேராலயம் திறப்பு விழா
பாளையங்கோட்டையில் புனித சவேரியார் பேராலயம் எழில்மிகு கலைநயத்துடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் அர்ச்சிப்பு விழா நேற்று மாலையில் நடந்தது.
மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கி, புதுப்பிக்கப்பட்ட புனித சவேரியார் பேராலய நுழைவுவாயிலை திறந்து வைத்தார். பேராலய கல்வெட்டை பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் திறந்து வைத்தார். பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி, புதுப்பிக்கப்பட்ட பேராலயத்தை திறந்து வைத்து அர்ச்சித்தார்.
சிறப்பு திருப்பலி
பின்னர் அங்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. விழாவில் பாளையங்கோட்டை மறைமாவட்ட முதன்மைகுரு குழந்தை ராஜ், பொருளாளர் அந்தோணிராஜ், செயலக முதல்வர் ஞானபிரகாசம், பாளையங்கோட்டை ஜான் குழுமத்தலைவர் மரியஜான், நிர்வாக இயக்குனர் மரியபாபு, பாளையங்கோட்டை அமலன் டிம்பர் டிப்போ உரிமையாளர் அமலன், பாத்திமா கார் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் வி.எம்.கிறிஸ்டோபர், எம்.ஏ.சி. சேவியர், எப்.பி.ஐ. கன்ஸ்ட்ரக்சன் நிர்வாக இயக்குனர் ரூபன்குமார், ஏ.பி. கனிஷா டிம்பர்ஸ் டிம்பர் எம்.பிரிட்டோ, கிங் லேண்ட் புரோமோட்டர்ஸ் அலக்சிஸ், வர்க்கீஸ் ரியல் எஸ்டேட் குமார் வர்க்கீஸ் ராஜ், அன்னை வேளாங்கன்னி நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரான்சிஸ் ராய், ஜான்சன் குரூப் உரிமையாளர் ஜான்சன், ஜோசப் சாமில் உரிமையாளர் அந்தோணி புஷ்பராஜன், டி.ஜோசப் அன்ட் சன்ஸ் உரிமையாளர் பெஞ்சமின் பெலிக்கான், செயின்ட் மேரீஸ் டிம்பர்ஸ் ரோலண்ட், தாமஸ் டிரேடர்ஸ் தாமஸ், ராஜேஷ் பர்னிச்சர்ஸ் உரிமையாளர் ராஜேஷ் ஏ.அந்தோணிராஜ், சேவியர் டிம்பர் டிப்போ சேவியர், தாசன் டிம்பர் டிப்போ தாசன், ப்ளாஸ் பேஷன் உரிமையாளர் ஆரோக்கியராஜ், அன்னை மைக்கில் அண்டன் சவுண்ட் சுதந்த்குமார், பிரின்ஸ் சர்ஜிக்கல் எம்.ராஜ்குமார், எஸ்.எம்.மகால் ஆர்.செல்வராஜ், லாரா பாரடைஸ் இன் ஓட்டல் உரிமையாளர் லாசர், விஸ்கோ சர்ஜிக்கல் ராஜசேகர், மாதா பர்னிச்சர் ஜோமி சி.வர்க்கீஸ், சிந்தியா பைனாஸ் சிந்தியா செல்வா உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
பொன்விழா நிறைவு
பாளையங்கோட்டை மறைமாவட்ட பொன்விழா நிறைவு கொண்டாட்டத்தையொட்டி, தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி வெர்டியர் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு திருத்தந்தையின் இந்திய-நேபாள தூதுவர் லெயோபோல்தோ ஜிரெல்லி தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.