சூரியா ஜூவல்லரி மார்ட் திறப்பு விழா


சூரியா ஜூவல்லரி மார்ட் திறப்பு விழா
x

காரைக்குடியில் சூரியா ஜூவல்லரி மார்ட் திறப்பு விழா நடந்தது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள நரு விழி காம்ப்ளக்சில் தங்கம், வைரம், வெள்ளி விற்பனை செய்யும் பிரமாண்டமான ஷோரூமான சூரியா ஜூவல்லரி மார்ட் திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு தொழிலதிபர் பி.எல்.படிக்காசு தலைமை தாங்கி சூரியா ஜூவல்லரி மார்ட்டினை திறந்து வைத்தார், வைரம் மற்றும் வெள்ளி பிரிவினை சிங்கப்பூர் தொழிலதிபர் செல்லப்பன் திறந்து வைத்தார்.

முதல் விற்பனையை அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் தொழிலதிபர் தங்கராஜ் தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை தொழிலதிபர் படிக்காசு பெற்றுக் கொண்டார். தொழிலதிபரும் வைர நிபுணருமான ஹர்ஷ் காந்த் சவானி, காரைக்குடி நகை வியாபாரிகள் சங்க தலைவர் ராகவன் செட்டியார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.

விழாவிற்கு வந்தவரை சூரியா ஜூவல்லரி மார்ட்டின் உரிமையாளரும் நருவிழி தொழில் குழுமங்கள் மற்றும் வித்யாலகிரி கல்வி குழுமங்களின் சேர்மன் கிருஷ்ணன்-லதா, நருவிழி குழுமங்களில் நிர்வாக இயக்குனர் கணேஷ்- கற்புக்கரசி, சீனிவாசன், அருணகிரி- கல்யாணி, சிங்கப்பூர் சூரியா அண்ட் சவானி டைமண்ட்ஸ் நிறுவன அதிபர் அய்யப்பன் -சூரியா ஆகியோர் வரவேற்றனர்.


Related Tags :
Next Story