இல்லம் தேடி கல்வி திட்ட 2-ம் ஆண்டு தொடக்க விழா
புளியங்குடியில் இல்லம் தேடி கல்வி திட்ட 2-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
புளியங்குடி:
வாசுதேவநல்லூர் வட்டார பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் 2-ம் ஆண்டு தொடக்க விழா, கற்பித்தல் உபகரணங்களின் கண்காட்சி விழா மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா புளியங்குடி சிந்தாமணி இந்து நாடார் உறவின்முறை தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலோசியஸ் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட அலுவலர் சீவலமுத்து முன்னிலை வகித்தார்.
தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ்குமார், வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ டாக்டர் சதன் திருமலைகுமார், நகரசபை தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன், நகரசபை துணைத் தலைவரும், தி.மு.க. நகரச் செயலாளருமான அந்தோணிசாமி, சிந்தாமணி இந்து நாடார் உறவின் முறை தலைவர் ஆனந்த், செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ராஜா எம்.எல்.ஏ, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கும், தேசிய திறனாய்வு மாதிரி தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.