புதிய கட்டிடம் திறப்பு விழா
சிந்தாமணி ஊராட்சி அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது
திருநெல்வேலி
இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சிந்தாமணி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சிந்தாமணி பஞ்சாயத்து தலைவர் எம்.ஜேசு மிக்கேல் தலைமை தாங்கி, திறந்து வைத்தார். தி.மு.க. ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் முனைஞ்சிப்பட்டி எஸ்.சுப்பையா குத்துவிளக்கு ஏற்றினார். பங்குத்தந்தை மெரிஷ் லியோ, ஒன்றிய பொறியாளர் உஷா, துணைத்தலைவர் தேவராஜன், உறுப்பினர்கள் கணபதி, சரவணன், ஆறுமுகம், வன்னியராஜா, அமலோற்பவ மேரி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முடிவில் ஊராட்சி செயலர் ஏ.சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story