இயற்கை விவசாயிகளின் வாரச்சந்தை தொடக்க விழா


இயற்கை விவசாயிகளின் வாரச்சந்தை தொடக்க விழா
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகளின் வாரச்சந்தை தொடக்க விழா நடந்தது.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயிகள் தங்கள் நிலத்தில் ரசாயனம், கலப்படம், பூச்சி கொல்லி மருந்து இல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளை விற்பனை செய்வதற்கான வாரச்சந்தை கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மைதானத்தில் தொடங்கப்பட்டது.

இந்த வாரச்சந்தை ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்.

இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து காய்கறிகள், பழங்கள் மற்றும் அரிசி வகைகளை வாங்கி சென்றனர்.


Next Story