வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் உருவப்படம் திறப்பு
வீரவநல்லூரில் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் உருவப்படம் திறக்கப்பட்டது.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
வீரவநல்லூரில் நகர வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் மறைந்த வி.ஆர்.சுடலை உருவப்படம் திறப்பு விழா நடந்தது. வியாபாரிகள் சங்க தலைவர் ரத்தினராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் உலகநாதன், பொருளாளர் அலியார், பேரூராட்சி மன்ற தலைவர் சித்ரா சுப்பிரமணியன், தி.மு.க. நகர செயலாளர் சுப்பையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வி.ஆர்.சுடலை உருவப்படத்தை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில கூடுதல் செயலாளர் ஆர்.கே.காளிதாசன் திறந்து வைத்தார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முத்து என்ற செண்பகராமன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story