ஆசிய ஆக்கி போட்டிக்கான பரிசு கோப்பை அறிமுக விழா


ஆசிய ஆக்கி போட்டிக்கான பரிசு கோப்பை அறிமுக விழா
x

தஞ்சையில் நடந்த ஆசிய ஆக்கி போட்டிக்கான பரிசு கோப்பை அறிமுக விழாவில் கலெக்டர்-2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த ஆசிய ஆக்கி போட்டிக்கான பரிசு கோப்பை அறிமுக விழாவில் கலெக்டர்-2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

ஆசிய ஆக்கி போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆக்கி இந்தியா இணைந்து ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பைக்கான 7-வது ஆடவர் ஆக்கி போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியானது அடுத்தமாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த தொடரில் நடப்பு சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான பரிசு கோப்பையையும், இலட்சினையான பொம்மனையும் கடந்த 21-ந் தேதி தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

தஞ்சையில் அறிமுகம்

போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் வெற்றி கோப்பை தமிழ்நாடு முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி போட்டிக்கான பரிசு கோப்பை நேற்றுஇரவு தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டது. தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் இந்த கோப்பைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் பரிசு கோப்பையையும், இலட்சினையான பொம்மனையும் கலெக்டர் தீபக் ஜேக்கப், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட விளையாட்டு அதிகாரி டேனியல் டேவிட் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

மரக்கன்றுகள்

பின்னர் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டியில் வெல்லும் அணி அடுத்த 2024-ம் ஆண்டு பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story