பள்ளி கட்டிட திறப்பு விழா


பள்ளி கட்டிட திறப்பு விழா
x
தினத்தந்தி 8 July 2023 12:45 AM IST (Updated: 8 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கொடைரோடு அருகே புதிய பள்ளி கட்டிட திறப்பு விழா நடந்தது.

திண்டுக்கல்

கொடைரோடு அருகேயுள்ள பள்ளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு நிலக்கோட்டை தொகுதி தேன்மொழி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பின்னர் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். பள்ளப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தகுமாரி வரவேற்றார்.

விழாவில் நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லத்தம்பி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சதீஷ்குமார், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சங்கையா (பள்ளப்பட்டி), குணசேகரன் (குல்லலக்குண்டு), அ.தி.மு.க. நிர்வாகிகள் ஒன்னப்பன், ஜெயராஜ், சுப்பையா, ஒப்பந்ததாரர் போஸ் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story