புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டிடம் திறப்பு விழா


புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டிடம் திறப்பு விழா
x

மருதகுளம் அருகே புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மருதகுளம் அருகே உள்ள தோட்டாக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் மாவட்ட கவுன்சிலர் நிதி மூலம் ரூ.1½ லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு அந்த கட்டிடத்தை திறந்து வைத்தார்.

விழாவில் ஆழ்வாநேரி பஞ்சாயத்து தலைவர் எஸ்.கே.சீனிதாஸ், யூனியன் துணைத்தலைவர் ஆர்.இசக்கிப்பாண்டி, ஒன்றிய துணைச்செயலாளர் சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா ஜெபமேரி நன்றி கூறினார்.


Next Story