சாத்தான்குளத்தில்ஊர்வசி இலவச பயிற்சி முகாம் திறப்பு


சாத்தான்குளத்தில்ஊர்வசி இலவச பயிற்சி முகாம் திறப்பு
x
தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில்ஊர்வசி இலவச பயிற்சி முகாம் திறப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளத்தில் அரசு போட்டி தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான ஊர்வசி இலவச பயிற்சி முகாம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் திறந்து வைத்தார். விழாவில் சாத்தான்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு அருள், தாசில்தார் ரதி கலா, சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் ரெஜினா ஸ்டெல்லா பாய், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோசப், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம சக்தி உள்ளிட்டோர் பேசினர்.

இதில், சாத்தான்குளம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜெகன் அந்தோணி டென்னிசன், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, யூனியன் ஆணையாளர் சுரேஷ், துணை ஆணையாளர் கருப்பசாமி, வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன் முருகேசன், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல முன்னாள் முதலூர் செயலாளர் சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story