சிதம்பரத்தில் வேல்ஸ் டெக்ஸ் புதிய ஜவுளிக்கடை திறப்பு விழா


சிதம்பரத்தில்    வேல்ஸ் டெக்ஸ் புதிய ஜவுளிக்கடை திறப்பு விழா
x

சிதம்பரத்தில் வேல்ஸ் டெக்ஸ் புதிய ஜவுளிக்கடை திறப்பு விழா நடைபெற்றது.

கடலூர்

சிதம்பரம்,

கடலூர் வேல்ஸ் டெக்ஸ் ஜவுளிக்கடையின் புதிய கிளை நிறுவனம் சிதம்பரம் மேலரத வீதியில் கஞ்சித்தொட்டி பஸ் நிறுத்தம் எதிரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கடலூர் நகைக்கடை அதிபர்கள் மணி செட்டியார், கோபு செட்டியார், வேல்ஸ் டெக்ஸ் உரிமையாளர்கள் குமார் செட்டியார், வேல்முருகன் செட்டியார் ஆகியோர் கலந்து கொண்டு புதிய ஜவுளிக்கடையை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். முதல் விற்பனையை சிதம்பரம் ஆடிட்டர் வைத்தியநாதன் பெற்றுக்கொண்டார். விழாவுக்கு வந்த அனைவரையும் கடையின் மேலாளர் பழனிவேல் தலைமையில் உறவினர்கள், நண்பர்கள், கடை ஊழியர்கள் வரவேற்றனர். திறப்பு விழா குறித்து வேல்ஸ் டெக்ஸ் உரிமையாளர்கள் குமார் செட்டியார், வேல்முருகன் செட்டியார் ஆகியோர் கூறுகையில், புதிதாக சிதம்பரத்தில் தொடங்கப்பட்ட எங்களது ஜவுளிக்கடையில் பட்டு ஜவுளிகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், ப்ளவுஸ், சர்ட்டிங், சூட்டிங், ஹோம்கேர் என அனைத்துக்கும் தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏராளமான ரகங்களில் ஜவுளிகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.மேலும் திறப்பு விழா சலுகையாக இன்றும், நாளையும் என 2 நாட்களில் எங்களிடம் ரூ.1,500-க்கு ஜவுளிவாங்கும் அனைவருக்கும் ரூ.450 மதிப்புள்ள 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளவர் பக்கெட் இலவசமாக வழங்கப்படும் என்றனர்.


Next Story