மகளிர் உரிமைத்திட்ட தொடக்க விழா


மகளிர் உரிமைத்திட்ட தொடக்க விழா
x

மகளிர் உரிமைத்திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி கலையரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் வரவேற்றார். விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து முதல் கட்டமாக 1,300 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட ஏ.டி.எம். கார்டினை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், தாசில்தார் அறிவழகன், நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, ஒன்றிய குழு தலைவர் சசிகலா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, தி.மு.க. நகர செயலாளர் மணி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் அழகு ராமானுஜம், நகர் மன்ற கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆர்.டி.ஓ. சிவக்குமார் (பொறுப்பு) நன்றி கூறினார்.


Related Tags :
Next Story