எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த கள்ளக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த  கள்ளக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை  செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
x

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த கள்ளக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஊக்கத்தொகை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் சமீர் 500-க்கு 466 மதிப்பெண்களும், பிளஸ்-2 தேர்வில் மாணவர் சாய்பிரசன்னா 600-க்கு 516 மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதையடுத்து பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. இதற்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமை தாங்கி, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள் 2 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், நகரமன்ற உறுப்பினர்கள் முருகன், விமலா அர்ச்சுனன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


Next Story