அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
x

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செங்கோட்டை வட்டாரத்தில் அரசு பள்ளிகளில் பயின்ற 10, 12-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்து அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செனட் உறுப்பினா் முரளி ஆகியோர் தலைமை தாங்கினர். செங்கோட்டை நகராட்சி தலைவா் ராமலெட்சுமி, துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் முருகேசன் வரவேற்றார். எஸ்.ஆர்.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி அனுசுயா 568 மதிப்பெண்களும், 10-ம் வகுப்பு மாணவி சவுமியா 475 மதிப்பெண்களும், எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் மாரிசெல்வம் 529 மதிப்பெண்களும், 10-ம் வகுப்பு மாணவி ஹரிஹரசுதன் 473 மதிப்பெண்களும், மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவன் பிரகாஷ் 440 மதி்ப்பெண்களும் பெற்றனர். இவர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியா் சமுத்திரக்கனி, நடிகர் ஜமீன்முத்துக்குமார் மற்றும் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் ஆசிரியா் சுதாகா் நன்றி கூறினார்.



Next Story