இஞ்சிமேடு திருமணி சேறைவுடையார் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை


இஞ்சிமேடு திருமணி சேறைவுடையார் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை
x

புத்தாண்டை முன்னிட்டு இஞ்சிமேடு திருமணி சேறைவுடையார் சிவன் கோவிலில் சிறப்பு பூைஜ நடந்தது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பெரியமலையில் உள்ள திருமணி சேறையுடையார், திருமணி நாயகி தாயார் சிவன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை நடந்தது.

சிவலிங்கம், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, அகத்திய முனிவர், நாகதேவதை ஆகிய மூலவர்களுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு ஆகியவை மூலம் சிறப்பு அபிஷேகத்தை கோவில் அர்ச்சகர் ஆனந்தன்சர்மா செய்தார். பின்னர் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

காலை 5 மணி அளவில் இருந்து கடும் குளிர் மற்றும் பனியை பொருட்படுத்தாமல் பக்தர்கள் வந்து, நீண்ட வரிசையாக நின்று திருமணி சேறைவுடையார் சிவலிங்கத்தையும், திருமணி நாயகி தாயாரையும் தரிசனம் செய்தனர்.

சிவயோகி சித்தர் ஐ.ஆர்.பெருமாள் சுவாமி பக்தர்களுக்கு பிரசாதம் கொடுத்து ஆசி வழங்கினார். சிவமுத்து குழுவினரால் பக்தி பாடல்கள் பாடப்பட்டது.

ஆரணி காய்கனி வியாபாரி பாரதிராஜா குடும்பத்தினர் அனைவருக்கும் அன்னதானம். வழங்கினர்.

இதில் வந்தவாசி, ஆரணி, போளூர், சென்னை, காஞ்சீபுரம் பகுதிகளில் இருந்து பக்தர்கள் காரிலும், வேனிலும் வந்து தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story