புத்தாண்டு கொண்டாடி விட்டு வந்தபோது சம்பவம்: தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
புத்தாண்டு கொண்டாடி விட்டு வந்தபோது தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் இறந்தார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் கீழப்பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் மைதீன். இவரது மகன் முகமது முசாபர்கனி(வயது 23). நேற்று முன்தினம் நண்பர்களுடன் திருமங்கலத்தை அடுத்த மறவன்குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் நள்ளிரவு 2 மணி அளவில் நண்பர் அலெக்ஸ் பாண்டியனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். வரும் வழியில் திருமங்கலம் வெளியூர் பஸ் நிலையம் அருகே வளைவில் வந்தபோது நிலை தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் முகமது முசாபர்கனி சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த நண்பர் அலெக்ஸ்பாண்டியன் லேசான காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் முகமது முசாபர் கனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.