குற்ற நிகழ்வுகளை பதிவு செய்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்
குற்ற நிகழ்வுகளை பதிவு செய்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. அறிவுறுத்தினார்.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் அங்குள்ள அனைத்து பதிவேடுகளையும் பார்வையிட்டார். பின்னர் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் நபர்கள், இலங்கை அகதிகள், முக்கிய குற்றவாளிகள், ரவுடிகளின் பட்டியல்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பாஸ்போர்டு விசாரணையில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறுகள் எதுவும் நடத்திடாத வகையில் ஒவ்வொரு குற்ற நிகழ்வையும் முறையாக பதிவு செய்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பிரசன்னகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருநாவுக்கரசு, ரமேஷ், குற்ற ஆவண காப்பக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுல்தான்பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.