நைஜீரிய நாட்டுக்காரர் உள்பட மேலும் 2 பேர் கைது


நைஜீரிய நாட்டுக்காரர் உள்பட  மேலும் 2 பேர் கைது
x

போலீஸ் அதிகாரியிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த வழக்கில் நைஜீரிய நாட்டுக்காரர் உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

அம்பை:

போலீஸ் அதிகாரியிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த வழக்கில் நைஜீரிய நாட்டுக்காரர் உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.7½ லட்சம் மோசடி

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு சிறப்பு காவல்படை கமாண்டர் அதிகாரியின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயர் அதிகாரி போன்று தொடர்பு கொண்ட மர்மநபர் இணையதளம் மூலம் பரிசுக்கூப்பன் அனுப்புமாறு கூறி ரூ.7½ லட்சத்தை மோசடி செய்தார்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த முரளி (வயது 41), வினய்குமார் (35) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் 2 பேர் கைது

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்திலும் இதேபோன்று மோசடி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பெங்களூருவில் இருந்து மர்மநபர்கள் இணையதளம் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் கைவரிசை காட்டியதும், அவர்கள் மணிமுத்தாறு சிறப்பு காவல்படை கமாண்டர் அதிகாரியிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஸ்டான்லி (40), மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சன் சோகாசர் (32) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த செல்போன்கள்,சிம்கார்டுகள், ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story