மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் உள்பட10 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை


மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் உள்பட10 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
x

மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் உள்பட 10 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

ஈரோடு

ஈரோடு மாநகர் பகுதியில் தெற்கு மற்றும் வடக்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள், சிக்னலை மீறுபவர்கள், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். குறிப்பாக மது அருந்திவிட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும்.

இந்தநிலையில் ஈரோட்டில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 9 பேரின் ஓட்டுனர் உரிமத்தையும், அதிக வேகமாக வாகனத்தை ஓட்டியதாக ஒருவரது ஓட்டுனர் உரிமத்தையும் என மொத்தம் 10 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்தனர்.


Next Story