தனியார் ஸ்கேன் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை..!


தனியார் ஸ்கேன் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை..!
x

தனியார் ஸ்கேன் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னையில் கடந்த 2000 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் 10 மாநிலங்களில் சுமார் 40 எம்ஆர்ஐ பிரிவுகளுடன் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உயர்தர மற்றும் நம்பகமான மருத்துவ பகுப்பாய்வு படம் எடுத்தல் மையமாக ஆர்த்தி ஸ்கேன் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு காரணமாக ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களிலும், மருத்துவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இயங்கிவரும் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் வரி ஏய்ப்பு ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.


Next Story