வருமான வரி விழிப்புணர்வு கூட்டம்
தென்காசியில் வருமான வரி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தென்காசி
தென்காசி வர்த்தக சங்கம் மற்றும் வரி ஆலோசகர் சங்கம் சார்பில் டி.டி.எஸ். விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தென்காசி வர்த்தக சங்க தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். செயலாளர் பரமசிவன் முன்னிலை வகித்தார். ஆடிட்டர் நாராயணன் வரவேற்றார். வருமான வரி அதிகாரி மகாராஜன் கோமதிநாயகம் டி.டி.எஸ். விழிப்புணர்வு குறித்து விளக்கி பேசினார். நிர்மல் குமார் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ஆடிட்டர் சதீஷ் பாலமுருகன், தொழிலதிபர் வி.டி.எஸ்.ஆர்.முஹம்மது இஸ்மாயில், மருந்து வியாபாரிகளின் மாவட்டத் துணைத் தலைவர் காந்தி, கனகராஜ், குமார் மற்றும் வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story