ெரயில்வே ஓய்வூதியர்களுக்கு வருமான வரியில் விலக்கு அளிக்க வேண்டும்-சங்க கூட்டத்தில் தீர்மானம்


ெரயில்வே ஓய்வூதியர்களுக்கு வருமான வரியில் விலக்கு அளிக்க வேண்டும்-சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 9 April 2023 12:30 AM IST (Updated: 9 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே ஓவ்யூதியர்களுக்கு வருமான வரியில் விலக்கு அளிக்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தூத்துக்குடி

கோவில்பட்டி:

ரெயில்வே ஓவ்யூதியர்களுக்கு வருமான வரியில் விலக்கு அளிக்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

சங்க கூட்டம்

கோவில்பட்டி ெரயில் நிலைய வளாகத்தில் அகில இந்திய ெரயில்வே ஓய்வூதியர்கள் சங்க மாதாந்திர கிளைக்கூட்டம் நடந்தது. கிளை தலைவர் ஏ.அருமைராஜ் தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் ஹரிஹர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். க.உதயசங்கர், சங்க செயலாளர் எஸ்.தங்கவேலு, மகளிரணி தலைவர் பட்டம்மாள், பொருளாளர் முருகையா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

கூட்டத்தில் மத்திய அரசின் மருத்துவமனை வசதிகள், அனைத்து நகரங்களிலும் இல்லாததால் நிலையான மருத்துவபடியை ரூ.2 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளை அதிகரித்து, மருத்துவ வசதி செய்ய வேண்டும்.

வருமான வரியில் விலக்கு

ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.15 லட்சமாக நிர்ணயிக்க வேண்டும். ஓய்வூதிய விதிகளை முறைப்படுத்தி வருமான வரி செலுத்துவதில் இருந்து ஓய்வூதியர்களுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ெரயில் பயணங்களில் அளித்து வந்த வசதிகளையும், சலுகைகளையும் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story