சாலையில் சுற்றித்திரியும் நாய்களால் விபத்துகள் அதிகரிப்பு


சாலையில் சுற்றித்திரியும் நாய்களால் விபத்துகள் அதிகரிப்பு
x

கீரமங்கலத்தில் பிரதான சாலைகளில் ஏராளமான நாய்கள் சுற்றுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

கால்நடைகளை கடித்து குதறும் நாய்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மற்றும் செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், மேற்பனைக்காடு உள்பட பல கிராமங்களிலும் நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுவதால் மேய்ச்சலுக்காக செல்லும் ஆடு, மாடுகளை கடித்து குதறி விடுகிறது.

அதே போல மனிதர்களையும் கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களில் கூட நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர்.

விபத்து ஏற்படுத்தும் நாய்கள்

கீரமங்கலம் பேரூராட்சியில் பட்டுக்கோட்டை சாலையில் சந்தைப்பேட்டை, மேற்பனைக்காடு பிரிவு சாலை, பஸ் நிலையம் பகுதியிலும் காந்திஜி ரோடு, கடைவீதி பகுதியில் நாய்கள் அதிகமாக கூட்டம் கூட்டமாக சாலைகளிலேயே சுற்றுவதாலும் சாலையில் நின்று சண்டையிட்டுக் கொள்வதாலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் நாய்கள் விழுந்து விபத்துகள் ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். அதனால் விபத்துகளை தடுக்க கீரமங்கலம் பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராம ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story