பொய்கை மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு


பொய்கை மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு
x

புயல் மழைக்கு பிறகு பொய்கை மாட்டுச்சந்தையில் மாடுகளின் வரத்து அதிகரித்திருந்தது.

வேலூர்

அணைக்கட்டு

புயல் மழைக்கு பிறகு பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று மாடுகளின் வரத்து அதிகரித்திருந்தது.

பொய்கை மாட்டுச்சந்தை

வேலூரை அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது.

இந்த மாட்டுச்சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலம் குப்பம், பலமநேர், புங்கனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இதனால் பண்டிகை காலங்களில் இந்தச் சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். கடந்த சிலவாரங்களாக தொடர்ந்து புயல் மழை பெய்து வந்ததால் மாடுகள் விற்பனை சற்று குறைந்த நிலையில் இருந்தது.

இந்த நிலையில் இந்த வாரம் மாடுகளின் வரத்து சற்று அதிகரித்திருந்தது.

கறவை மாடுகள், காளைகள், உழவுமாடுகள், எருமை மாடுகள் என 800-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. வியாபாரிகளும், விவசாயிகளும் மாடுகளை வாங்க ஆர்வம் காட்டினர்.

வரத்து அதிகரிப்பு

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் கடந்த சில வாரங்களாக பொய்கை மாட்டுச்சந்தையில் விற்பனை குறைந்து காணப்பட்டு வந்தது.

பொங்கலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் கால்நடை வருகை அதிகரித்துள்ளது.

மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி மாடுகளுக்கு கயிறு, மணி உள்ளிட்ட பொருட்களை வாங்கவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

இதனால் பொய்கைச் சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளது என்றார்.


Next Story