அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு:குமுளி மலைப்பாதையில் பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீசாரை நியமிக்க கோரிக்கை


அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு:குமுளி மலைப்பாதையில் பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீசாரை நியமிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமுளி மலைப்பாதையில் பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என்று அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தேனி

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு புத்தாண்டு பண்டிகை மற்றும் மகரஜோதியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். அதன்படி, தேனி மாவட்டம் கூடலூர், குமுளி மலைப்பாதை வழியாக வாகனங்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளன. இதனால் குமுளி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட தொடங்கியது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும். மேலும் அய்யப்ப பக்தர்களின் கூட்டத்திற்குள் புகுந்து திருடும் மர்ம கும்பல்களை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட வேண்டும், மலைப்பாதையில் வாகனங்களுக்கிடையே ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை சீரமைக்க போலீசார் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story