கொரோனா பரவல் அதிகரிப்பு: விடுதி மாணவர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்


கொரோனா பரவல் அதிகரிப்பு: விடுதி மாணவர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்
x

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கி பயிலும் இருவருக்கு, சில தினங்களுக்கு முன்பு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைடுத்து சுகாதாரத் துறையினர், அங்கு தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் 235 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில், 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தனிமைப்பட்டுத்தப்பட்டு கண்காணிக்ப்படுகின்றனர்.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பால் விடுதி மாணவ, மாணவிகள் சொந்த ஊருக்கு செல்ல அறிவுறுத்தப்படுள்ளது. மேலும் வரும் 13 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்பு நடைபெறும் என மையத்தின் உதவி பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


Next Story