குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு
குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது
தென்காசி
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். தற்போது சீசன் முடிந்த பிறகும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் குறைவாக வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் தென்காசி மற்றும் குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் கடுமையான வெயில் அடித்தது. மாலை சுமார் 5 மணிக்கு தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்தது.
இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது. மெயின் அருவியில் நேற்று விழுந்ததை விட சற்று அதிகமாக நீர்வரத்து உள்ளது. ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே உள்ளது.
Related Tags :
Next Story