மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சேலம்

மேட்டூர்,

கர்நாடகா மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த 8-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதாவது, கடந்த 9-ந் தேதி காலை அணைக்கு வினாடிக்கு 2,141 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது 10-ந் தேதி காலை வினாடிக்கு 3,149 கன அடியாக அதிகரித்தது. நேற்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 8,010 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தானது மேலும் அதிகரித்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடிக்கு மேல் வரத் தொடங்கினால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98 அடியாக இருந்தது.


Next Story