மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
சேலம்
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 1-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 1,154 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. 2-ந் தேதி நீர்வரத்து வினாடிக்கு 1,304 கனஅடியாக அதிகரித்தது. இந்தநிலையில் நேற்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 1,454 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 103.72 அடியாக இருந்தது.
Next Story