முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 April 2023 2:00 AM IST (Updated: 4 April 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தேனி

தமிழக-கேரள எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. கோடைகாலத்தையொட்டி சுட்டெரித்த வெயிலால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 104 கனஅடியாக இருந்தது. அதேபோல் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 116.35 அடியாக இருந்தது.

இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 116.40 அடியாக உயர்ந்தது. மேலும் நீர்வரத்தும் வினாடிக்கு 204 கனஅடியாக அதிகரித்தது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தற்போது தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 100 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- முல்லைப்பெரியாறு 19.2, தேக்கடி 25.4, கூடலூர் 16.8, சண்முகாநதி 7.6, உத்தமபாளையம் 1.6.


Next Story