உளுந்து விலை உயர்வு
விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து விலை உயர்ந்து காணப்பட்டது.
விருதுநகர்,
விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து விலை உயர்ந்து காணப்பட்டது.
விலை உயர்வு
விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.8,300 முதல் ரூ.9,500 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.1,500 விலை உயர்ந்து ரூ.12,400 ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.9,800 ஆகவும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.9 ஆயிரம் ஆகவும், பாசிப்பயறு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.8500 வரையிலும் விற்பனையானது.
துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு ரூ.10,500 முதல் ரூ.11,300 வரையிலும் விற்பனையானது. மல்லி லயன் ரகம் 40 கிலோ ரூ.5,350 முதல் ரூ.5,450 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.4,600 முதல் ரூ.5,200 வரை விற்பனை ஆனது.
பாமாயில்
முண்டு வத்தல் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரையிலும், புது வத்தல் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனையானது.
கடலை எண்ணெய் 15 லிட்டர் ரூ.2,950 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.5,115 ஆகவும், பாமாயில் ரூ.15 கிலோ ரூ.20 விலை அதிகரித்து ரூ.2,040 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது. நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7 ஆயிரமாக விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.4,600 ஆகவும் எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2,400 ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.20 அதிகரித்து ரூ.3,840 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.4,200 ஆகவும் விற்பனை ஆனது.
பட்டாணி
பொரிகடலை விலை ரூ.4,100 ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.4 ஆயிரம் ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,420 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,050 ஆகவும், ரவை 25 கிலோ ரூ.1,110 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.830 ஆகவும் விற்பனை ஆனது.
பட்டாணி 100 கிலோ ரூ.6,800 ஆகவும், பட்டாணி பருப்பு ரூ.8,300 ஆகவும், மசூர் பருப்பு ரூ.10,700 ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ.21,600 ஆகவும், ஏ ரகம் ரூ.21,500 ஆகவும், சி ரகம் ரூ.19,500 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.9,800 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.8 ஆயிரமாகவும் விற்பனையானது.