மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் வேகம் அதிகரிப்பு


மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் வேகம் அதிகரிப்பு
x

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதுரை-கச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை


மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதுரை-கச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கச்சிகுடா எக்ஸ்பிரஸ்

தென்னக ரெயில்வேயில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாகர்கோவில்-சென்னை இடையேயான இரட்டை அகலப்பாதை பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு தயாராகி வரும் நிலையில் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படுகிறது.

ஏற்கனவே, மதுரை-தூத்துக்குடி, நெல்லை இடையேயான இரட்டை அகலப்பாதை பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, நெல்லை-நாகர்கோவில் இடையேயும் இரட்டை அகலப்பாதை பணிகள் முடிந்துள்ளன.

இதற்கிடையே, மதுரை-கச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வேகம் அதிகரிக்கப்பட்டு, தற்போது சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, மதுரை-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.17615/17616) வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதியில் இருந்து (வ.எண்.22715/22716) சூப்பர் பாஸ்ட் ஆக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலின் முதல் சேவை கச்சிகுடாவில் இருந்து வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதியும், மதுரையில் இருந்து வருகிற ஜூலை மாதம் 16-ந் தேதியும் தொடங்குகிறது.

அதன்படி, மதுரை-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22716) மதுரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.40 மணிக்கு கச்சிகுடா ரெயில் நிலையம் சென்றடையும். இந்த ரெயில் தற்போது மதியம் 1.20 மணிக்கு கச்சிகுடா சென்றடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரெயில் சூப்பர்பாஸ்ட் ரெயிலாக மாற்றப்பட்டுள்ளதால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேகம் அதிகரிப்பு

மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16729) இன்று (புதன்கிழமை) முதல் மணியாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1.25 மணிக்கு பதிலாக 1.12 மணிக்கும், நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 2.45 மணிக்கு பதிலாக 2 மணிக்கும், வள்ளியூர் ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 3.22 மணிக்கு பதிலாக 2.40 மணிக்கும் புறப்படும். கோவை-நாகர்கோவில் நள்ளிரவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22668) விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1.15 மணிக்கு பதிலாக 1.07 மணிக்கும், கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1.52 மணிக்கு பதிலாக 1.42 மணிக்கும், மணியாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து 2.50 மணிக்கு பதிலாக நள்ளிரவு 2.20 மணிக்கும், நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து 3.25 மணிக்கு பதிலாக 3.05 மணிக்கும் புறப்படும்.

சென்னையில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரி வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12633) விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1.45 மணிக்கு பதிலாக 1.37 மணிக்கும், நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 3.50 மணிக்கு பதிலாக 3.25 மணிக்கும் புறப்படும்.


Next Story