வேலூருக்கு கரும்பு வரத்து அதிகரிப்பு
பொங்கல்பண்டிகையை முன்னிட்டு வேலூருக்கு கரும்பு வரத்து அதிகரித்துள்ளது.
வேலூர்
பொங்கல் பண்டிகையொட்டி பொதுமக்கள் வீடுகளில் கரும்புகள் வைத்து வழிபடுவார்கள். அதனால் பொங்கல் பண்டிகையில் கரும்பு முக்கிய இடம் வகிக்கிறது. இந்த ஆண்டு பொங்கல்பண்டிகையை முன்னிட்டு வேலூருக்கு கரும்புகள் வரத்து தொடங்கி உள்ளது. பண்ருட்டி, சேலம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்புகள் கொண்டுவரப்படும் கரும்புகள் வேலூரில் குவிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வணிகர் ஒருவர் கூறுகையில், ஒரு கட்டு கரும்பில் சுமார் 18 முதல் 20 கரும்புகள் இருக்கும். ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையாகிறது. கரும்பு வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் கரும்புகள் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.
Related Tags :
Next Story