தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரிப்பு


தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரிப்பு
x

தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரித்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பனிப்பொழிவு சில இடங்களில் இன்னும் காணப்படுகிறது. இருப்பினும் பகலில் வெயிலின் தாக்கம் சற்று உள்ளது. இந்த நிலையில் கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மற்றும் தாகம் தீர்க்க கூடிய தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு தற்போதே வரத்தொடங்கி உள்ளது. ஆங்காங்கே சாலையோரம் தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருப்பதை காணலாம். இதேபோல பழக்கடைகளிலும் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த நிலையில் அறந்தாங்கியில் தர்பூசணி பழங்கள் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. சாலையோரங்களில் தர்பூசணிகள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது. இதுதவிர பீஸ் கணக்கில் துண்டு, துண்டாக நறுக்கியும் விற்பனை செய்யப்படுகிறது. வெயில் சற்றே உள்ள நிலையில் பொதுமக்கள் சிலர் தர்பூசணி பழங்களை விரும்பி சாப்பிடுகின்றனர்.


Next Story