வரத்து அதிகரிப்பு: ஊட்டி உழவர் சந்தையில் காய்கறிகள் விலை குறைந்தது


வரத்து அதிகரிப்பு: ஊட்டி உழவர் சந்தையில் காய்கறிகள் விலை குறைந்தது
x
தினத்தந்தி 2 Feb 2023 12:30 AM IST (Updated: 2 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி உழவர் சந்தையில் வரத்து அதிகரிப்பு காரணமாக காய்கறிகள் விலை குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி உழவர் சந்தையில் வரத்து அதிகரிப்பு காரணமாக காய்கறிகள் விலை குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஊட்டி உழவர் சந்தை

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளைகிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், மேரக்காய் உள்ளிட்ட காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல் சமவெளி பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் நீலகிரிக்கு சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்டு உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சமவெளி பகுதிகளில் அதிக அளவில் இருந்த பனிப்பொழிவு காரணமாக காய்கறி வரத்து குறைவாக இருந்தது. தற்போது காய்கறி வரத்து சமவெளி பகுதியில் இருந்து ஊட்டி உழவர் சந்தைக்கு அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை குறைந்து உள்ளன.

தக்காளி ரூ.26

ஊட்டி மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.70-க்கு விற்ற சின்ன வெங்காயம் நேற்று ரூ.45-க்கும், ரூ 40-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி ரூ.26-க்கும், ரூ.40-க்கு விற்ற பெரிய வெங்காயம் ரூ.30 என விலை குறைந்தது. கடந்த வாரம் ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட புருக்கோலி நேற்று ரூ.60-க்கு மட்டுமே விலை போனது. கத்தரிக்காய் ரூ.26, வெண்டை ரூ.60, அவரை ரூ.40, புடலங்காய் ரூ.26, பீர்க்கங்காய் ரூ.45, சுரைக்காய் ரூ.22, பூசணிக்காய் ரூ.20, பச்சை மிளகாய் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் நேற்று முகூர்த்தம் காரணமாக வாழ இலை விலை அதிகரித்து காணப்பட்டது. இதன்படி ஒரு இலை கட்டு ரூ. 500-க்கு செல்லும் நிலையில் நேற்று ரூ.1000-க்கு விற்பனையானது.


Next Story