மார்கழி மாத பிறப்பையொட்டி கோலப்பொடி விற்பனை அதிகரிப்பு


மார்கழி மாத பிறப்பையொட்டி கோலப்பொடி விற்பனை அதிகரிப்பு
x

மார்கழி மாத பிறப்பு, தை மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி கோலப்பொடி விற்பனை அதிகரித்துள்ளது.

மதுரை


மார்கழி மாத பிறப்பு, தை மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி கோலப்பொடி விற்பனை அதிகரித்துள்ளது.

கண்கொள்ளா காட்சி

மார்கழி மாதம் பிறந்து விட்டால் கதிரவன் கண் விழிக்கும் முன் கண் விழித்து குளிர்ந்த நீரில் நீராடி கோலத்தால் வாசலை அலங்கரித்து அன்றைய பொழுதை இனிதே வரவேற்கத்தொடங்கி விடுவர் இல்லத்தரசிகள். அவர்களுடன் சேர்ந்து குழந்தைகளும் இணைந்து வண்ணமயமான கோலங்களை இட்டு மகிழ்வர்.

கோலங்களில் புள்ளி வைத்து போடும் கோலம், ரங்கோலி, சிக்குக்கோலம், உருவ கோலம் இன்னும் பல வகையான கோலங்கள் உள்ளன. மார்கழி மாதம் முழுவதும் வண்ண கோலமிட்டு அந்த பகுதியே பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

இன்று (வெள்ளிக்கிழமை) 16-ந் தேதி மார்கழி பிறக்கிறது.

இதையொட்டி மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோலப்ெபாடி விற்பனை நடந்து வருகிறது.

இதுகுறித்து கோலப்பொடி விற்பனையாளர்கள் கூறியதாவது:-

ஆண்டுதோறும் கோலப்பொடி விற்பனை நடைபெறுவது வழக்கம். ஆனால் மார்கழி மாதம் முதல் தை மாதம் வரை கோலப்பொடி விற்பனை வழக்கத்தை விட 5 மடங்கு அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை அதிகரித்து உள்ளது. கோலப்பொடி பாக்கெட் ரூ. 5 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோலப்போட்டி

தை பொங்கலை முன்னிட்டு கோவிலுக்கு முன்பாக பெண்கள் கோலமிடுவது வழக்கம். அதேபோல கோலப் போட்டிகள் அதிக அளவில் நடைபெறும். எனவே மார்கழி, தை மாதங்களில் மற்ற மாதங்களை விட விற்பனை அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story