குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு


குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக, குற்றாலம் மெயின் அருவியில் நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும். இந்த சீசனை அனுபவிப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்த மாத தொடக்கத்தில் சீசன் ஆரம்பிக்கும் சூழ்நிலை இருந்தபோதிலும் கடுமையான வெயில் போன்ற வானிலை மாற்றத்தால் சீசன் தள்ளிப்போனது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிகவும் குறைவாக விழுந்தது.

இந்த நிலையில் நேற்று காலை குற்றாலத்தில் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் தென் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று மலைப்பகுதியில் மழை பெய்தது. அதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதேபோல் ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது. லேசான சாரல் மழையும் பெய்தது. இருப்பினும் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது. இதனால் அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.


Next Story