நீர்வரத்து அதிகரிப்பு ..! குற்றாலத்தில் அனைத்து அருவியிலும் குளிக்க தடை


நீர்வரத்து அதிகரிப்பு ..! குற்றாலத்தில்  அனைத்து அருவியிலும் குளிக்க தடை
x

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவியிலும் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இந்த நிலையில் கனமழையால் நீர்வரத்து அதிகரிதுள்ளது . நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவியிலும் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.ஐந்தருவி , பழைய குற்றாலம் , பிரதான அருவி உள்ளிட்ட அனைத்து அருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story