தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு


தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
x

மழையின் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

வாணாபுரம்

கிருஷ்ணகிரி மற்றும் செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலை பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் வருகை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் இருக்கும் அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வருவதால் அதனை அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களாக தண்ணீர் தெளிந்த நிலையில் சென்றது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ெதன்பெண்ணை ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் அதிக அளவில் இருகரையும் தொடும் அளவிற்கு சென்று வருகிறது.

இதனால் தென்பெண்ணை ஆறு செந்நிறமாக காட்சியளிக்கிறது.


Next Story