நாமக்கல்மலைக்கோட்டை மதில்சுவரில் நீர்கசிவு அதிகரிப்பு


நாமக்கல்மலைக்கோட்டை மதில்சுவரில் நீர்கசிவு அதிகரிப்பு
x
நாமக்கல்

நாமக்கல் நகரின் மைய பகுதியில் ஒரே கல்லினால் ஆன மலை உள்ளது. இந்த மலையின் மீது சுற்றிலும் சுமார் 5 அடி உயரம் கொண்ட மதில்சுவர் கட்டப்பட்டு கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது. இந்த மதில் சுவரில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மலைக்கோட்டையில் ஆங்காங்கே நீர்கசிவு ஏற்பட்டு வருகிறது. சமீபகாலமாக இந்த நீர்கசிவு அதிகரித்து உள்ள நிலையில், மதில்சுவர்களை புதுப்பிக்க மத்திய தொல்லியல் துறையினர் நாமக்கல் வந்து மலைக்கோட்டையை ஆய்வு செய்து உள்ளனர்.

இது குறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நாமக்கல் மலைக்கோட்டை மதில்சுவர் ஆங்காங்கே விரிசல் அடைந்து காணப்படுகிறது. இதனால் நீர்கசிவு அதிகரித்து உள்ளது. எனவே இதை பழமை மாறாமல் புனரமைக்க, தொல்லியல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். அவர்களின் அனுமதி கிடைத்தவுடன் சீரமைப்பு பணிகள் தொடங்கும். இதேபோல் சமூக விரோதிகளை கட்டுப்படுத்த நுழைவு வாயில் பகுதியில் இரும்பு வேலி அமைக்கவும், நரசிம்ம சாமி கோவில் கொடிமர மண்டபத்தில் உள்ள விரிசலை புனரமைக்கவும் உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story