சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு


சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
x

தொடர் மழையால் வனப்பகுதி பசுமைக்கு திரும்பியதால், சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அதனை தொந்தரவு செய்யக்கூடாது என்று சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

தொடர் மழையால் வனப்பகுதி பசுமைக்கு திரும்பியதால், சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அதனை தொந்தரவு செய்யக்கூடாது என்று சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

பசுமைக்கு திரும்பியது

முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலால் வனப்பகுதி வறட்சியாக காணப்பட்டது. இதனால் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பசுந்தீவனம், தண்ணீரைத் தேடி இடம் பெயர்ந்து சென்றது. இதன் காரணமாக காப்பகத்தின் கரையோரம் உள்ள கூடலூர், ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வர தொடங்கியது.இதனிடையே வழக்கத்துக்கு மாறாக கடந்த மே மாதம் முழுவதும் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தொடர் மழை பெய்தது. இதனால் வறட்சியாக காணப்பட்ட வனம் பசுமைக்கு திரும்பியது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் முதுமலை வனம் பசுமையாக உள்ளது. இதன் காரணமாக காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் முதுமலை வனத்துக்கு திரும்பியது.

தொந்தரவு செய்யக்கூடாது

இதன் காரணமாக காப்பகத்துக்கு உட்பட்ட கூடலூர்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை, முதுமலை- மசினகுடி சாலையோரம் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இருப்பினும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது.வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். எனவே சுற்றுலாப் பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென வனத்துறையினர் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வழக்கத்துக்கு மாறாக கோடை காலத்தில் இருந்து தொடர் மழை பெய்து வருவதால் காட்டு தீ பரவவில்லை.

மேலும் வன விலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனமும் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. அதன் காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை கண்டு ரசித்து செல்கின்றனர் என்றனர்.


Next Story