காற்றின் வேகம் அதிகரிப்பு: குமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்


காற்றின் வேகம் அதிகரிப்பு: குமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்
x

கோப்புப்படம் 

காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், விவேகானந்தர் மண்டபத்திற்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் சார்பில் சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து கானப்படுகிறது. இதன் காரணமாக விவேகானந்தர் மண்டபத்திற்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story