முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

தேனி

தமிழக-கேரள எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. இந்தநிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதன் எதிரொலியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 135.60 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 969 கன அடியாக காணப்பட்டது. இதற்கிடையே தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 272 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.75 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 272 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 1,822 கன அடியாகவும் உள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- முல்லைப்பெரியாறு 13.2, தேக்கடி 48, கூடலூர் 21.6, உத்தமபாளையம் 26.8, வீரபாண்டி 25, வைகை அணை 56, மஞ்சளாறு 57, சோத்துப்பாறை 21, போடி 52.4, பெரியகுளம் 55, ஆண்டிப்பட்டி 82.8, அரண்மனைபுதூர் 50.8.


Next Story