சென்னையில் அதிகரித்த காற்று மாசு...!
தீபாவளி பண்டிகையையொட்டி வாணவேடிக்கையால் சென்னை நகரமே வண்ணமயமாக காட்சி அளித்தது.
சென்னை,
தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் தொடர்ச்சியாக பட்டாசு வெடித்து வருவதால் காற்று மாசு அதிகரித்துள்ளது. நேற்று மாலை 4 மணி அளவில் காற்றில் நுண் துகள்களின் அளவு 109 என இருந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் 192 என்ற அளவாக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி வாணவேடிக்கையால் சென்னை நகரமே வண்ணமயமாக காட்சி அளித்தது.
பொதுமக்கள் தொடர்ச்சியாக பட்டாசு வெடித்து வந்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புகைமண்டலமாக காட்சி அளித்தது. கடும் புகை மண்டலத்தால் விமான போக்குவரத்து, ரெயில் போக்குவரது பேருந்து போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது. சாலைகளில் வண்டிகளில் செல்வோர் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். சாலைகளே தெரியாத அளவிற்கு புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.