திருச்சுழியில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்
திருச்சுழியில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ெபாதுமக்கள் அவதியடைகின்றனர்.
திருச்சுழி,
திருச்சுழியில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ெபாதுமக்கள் அவதியடைகின்றனர்.
போக்குவரத்து ெநரிசல்
திருச்சுழியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் மக்கள் நெருக்கடியில் திணறி வருகின்றனர்.
காரியாபட்டி ரோடு, பஜார், தாலுகா அலுவலக ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள குறுகலான சாலையை நடைப்பாதை கடைக்காரர்கள் ஆக்கிரமித்து, போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரித்து வருகின்றனர்.
கூடுதல் போலீசார்
மேற்கண்ட பகுதிகளில் வாகனங்களை அங்கும், இங்குமாக நிறுத்தி செல்வதால் அந்த வழியை கடந்து செல்பவர்கள் பெரிதும் சிரமத்துடன் செல்ல வேண்டி இருக்கிறது.
இதனால் நகரின் முக்கிய சந்திப்புகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கூடுதல் போலீசாரை நியமித்து, நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ஊராட்சி துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.