ஈரோட்டில் அதிகரிக்கும் பனிப்பொழிவு: குளிர்கால ஆடைகள் விற்பனை தொடங்கியது


ஈரோட்டில் அதிகரிக்கும் பனிப்பொழிவு:  குளிர்கால ஆடைகள் விற்பனை தொடங்கியது
x

ஈரோட்டில் அதிகரிக்கும் பனிப்பொழிவு காரணமாக குளிர்கால ஆடைகள் விற்பனை தொடங்கியது.

ஈரோடு

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக இரவு, அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இரவு 8 மணியில் இருந்தே குளிர்ந்த காற்று வீச தொடங்குகிறது. இதனால் இரவில் வெளியில் செல்லும் நபர்கள் குளிர்கால ஆடைகளான 'சுவெட்டர்' அணிந்து செல்கிறார்கள். இதேபோல் வீட்டில் குழந்தைகளுக்கு குளிர்வதால், 'சுவெட்டர்' அணிந்து விடுகிறார்கள். ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில் குளிர்கால ஆடைகள் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், "ஆண்டுதோறும் குளிர் காலத்தின்போது இங்கு கடைகள் அமைக்கப்படும். கடந்த ஆண்டு பனிப்பொழிவு குறைவாக இருந்ததால் விற்பனை மந்தமாக காணப்பட்டது. இந்த ஆண்டு பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தற்போது பனிப்பொழிவு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. எனவே விற்பனை அதிகமாக காணப்படும் என்று எதிர்பார்க்கிறோம். குழந்தைகளுக்கான 'சுவெட்டர்' ரூ.150 முதல் கிடைக்கிறது. இதேபோல் கடந்த வாரம் மழை பெய்ததால், மழை கோட்டு விற்பனை அதிகமாக இருந்தது", என்றார்.


Next Story